/
கோயில்கள் செய்திகள் / குன்னுார் தந்தி மாரியம்மன் தேர்திருவிழாவிற்காக வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தல்
குன்னுார் தந்தி மாரியம்மன் தேர்திருவிழாவிற்காக வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED :1330 days ago
குன்னுார்: குன்னூரில் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி தர நகராட்சிக்கு பா.ஜ.,வலியுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட பா.ஜ., மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், நகர செயலாளர் குங்குமராஜ் ஆகியோர் நகராட்சி கமிஷனுருக்கு அனுப்பிய மனு :
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா தினமும் நடக்க உள்ளதால் நகர, கிராமங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பழைய கழிப்பிடம் நவீன கழிப்பிடமாக மாற்ற இடிக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கழிப்பிட வசதியின்றி பலரும் அவதிக்குள்ளாகின்றனர். மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தில் இ - டாய்லெட் அமைத்து தர வேண்டும். மவுன்ட் ரோடு, வி.பி.தெரு, கிருஷ்ணாபுரம் சேதமடைந்த ரோடுகள் சீரமைக்க வேண்டும். பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.