விவசாயம் செழிக்க பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1330 days ago
பெரியகுளம்: வடகரை பகவதி அம்மன் கோயில் மறு பூஜையில் பெரியகுளம் பகுதியில் விவசாயம் செழிக்க சிறப்பு பூஜை நடந்தது.
பெரியகுளம் வடகரை மலைமேல் வைத்தியநாத சுவாமி கோயிலில் உப கோவிலான பகவதியம்மன் கோயில் மறு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயிலில் மாசி, பங்குனி மாத திருவிழா மார்ச் 8ல் சாட்டுதலும்,மார்ச் 14 முதல் மார்ச் 23 வரை 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடந்தது. இன்று மறு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். வடகரை நடுப்புரவு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மண்டகப்படி செய்தனர். இதில் பெரியகுளம் பகுதியில் விவசாயம் செழிக்க ஒரு மணி நேரம் சிறப்பு பூஜை நடந்தது.