திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதோஷ பூஜை
ADDED :1548 days ago
திருப்பரங்குன்றம்: பிரதோஷத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரர், கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள மகா நந்திக்கும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜை, அலங்காரம் நடந்தது. அங்காள பரமேஸ்வரி சமேத குருநாதசுவாமி கோயில் குருநாத சுவாமி, திருநகர் சித்தி விநாயகர் கோயில் காசி விஸ்வநாதர், மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான், மலைமேல் காசி விஸ்வநாதர் கோயில், மலை அடிவாரம் பழனியாண்டவர் கோயில் காசி விஸ்வநாதர், பசுபதீஸ்வரர், தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சொக்கநாதருக்கு அபிஷேகங்கள், பூஜை, அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.