உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

எமனேஸ்வரம்: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தின் தொடர் நிகழ்வாக மண்டலாபிஷேகம் நிறைவடைந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. மேலும் நேற்று காலை 10:30 மணிக்கு பெருமாள், பெருந்தேவித் தாயார் கோயிலை வலம் வந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தாயார் முன் மண்டபத்தில் ஊஞ்சலில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் அனைவருக்கும் திருமாங்கல்யம், அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சவுராஷ்டிர சபை சபை மற்றும் அரவிந்த நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !