கர்நாடகாவில் விஜயேந்திரர் யாத்திரை
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கர்நாடகா மாநிலத்தில் யாத்திரை சென்று அருளாசி வழங்கி வருகிறார்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மார்ச் 16ல் காஞ்சி சங்கர மடத்தில் இருந்து யாத்திரை புறப்பட்டு சென்றார். ஆந்திர மாநிலம் கடப்பா, தாடியாத்திரி, அனந்தபூர் போன்ற பகுதிகளுக்கு சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து கர்நாடக மாநிலம் சந்துாருக்கு மார்ச் 25ல் சென்றடைந்தார். மறுநாள் மாலையில் காஞ்சி மஹா சுவாமிகள் அனுஷ்டானம் செய்த மாட்டு தொழுவத்திற்கும், அப்போதைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி தரிசனம் செய்த இடத்திற்கும் சென்றார்.கர்நாடகா சமஸ்தானத்தைச் சேர்ந்த கோர்படே குடும்பத்தினருக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து சந்துார் நகருக்கு சுவாமிகளை பக்தர்களை ஊர்வலமாக அழைத்து சென்றனர். மாலை 6:30 மணிக்கு துவங்கிய ஊர்வலம் இரவு 9:30 மணிக்கு நிறைவடைந்தது. காஞ்சி மஹா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1978 - 79ம் ஆண்டுகளில் சந்துாருக்கு பாதயாத்திரை விஜயம் செய்த இடங்களை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பார்வையிட்டார். அங்கு ஆஹூய வரதா என்ற சொல்லுக்கு சுவாமிகள் விளக்கம் அளித்தார். மார்ச் 27 சிவவிலாஸ் அரண்மனைக்கு சென்று, குருபடே குடும்பத்தினரை ஆசிர்வதித்தார். நேற்று முன்தினம் தீர்த்த பிரசாதம் அருளாசி வழங்கினார்.