உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளிங்கிரி மலைக்கு 51வது ஆண்டாக பாத யாத்திரை

வெள்ளிங்கிரி மலைக்கு 51வது ஆண்டாக பாத யாத்திரை

பல்லடம்: பருவாய் கிராமத்தில் இருந்து, 51வது ஆண்டாக வெள்ளிங்கிரி மலைக்கு பக்தர்கள் குழுவினர் பாதயாத்திரை புறப்பட்டனர்.

பல்லடம் அடுத்த வருவாய் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளிங்கிரி ஆண்டவர் பாதயாத்திரை குழு, கடந்த, 1971ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், 25 பேருடன் துவங்கப்பட்ட இக்குழுவில், தற்போது, 150க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆண்டுதோறும், பருவாயில் இருந்து பாத யாத்திரையாக வெள்ளிங்கிரி மலைக்கு செல்வதை இக்குழு வழக்கமாக கொண்டுள்ளது. இது குறித்து குழுவினர் கூறுகையில், கடந்த, 50 ஆண்டுகளாக வெள்ளிங்கிரி மலைக்கு பாதயாத்திரை சென்று வருகிறோம். முன்னதாக, மாலை அணிந்து பத்து நாட்கள் விரதம் இருப்போம். பருவாய் விநாயகர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டு, காவடி ஆட்டம் ஆடி பாதயாத்திரை துவங்கும். யாத்திரை முடிந்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து வருவோம். யுகாதி பண்டிகை அன்று கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு புனித நீர் மூலம் அபிஷேகம் செய்யப்படும். தற்போது, 51வது ஆண்டாக யாத்திரை மேற்கொண்டு உள்ளோம் என்றனர். முன்னதாக, விநாயகர் கோவிலுக்கு வந்த பாத யாத்திரை குழுவினர் காவடி ஆட்டம் ஆடினர். பொங்கல் வைத்து விநாயகர் வழிபாடு மேற்கொண்ட பின், குடும்பத்தினர் அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !