உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவி கருமாரியம்மன் கோவில் விழா துவக்கம்

தேவி கருமாரியம்மன் கோவில் விழா துவக்கம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, தேவி கருமாரியம்மன் கோவில், 31 வது ஆண்டு விழா நேற்று, பூச்சாட்டுடன் துவங்கியது.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர், தேவி கருமாரியம்மன், காலபைரவர், முருகர் ஆகிய சன்னதிகள் உள்ளன. வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், 48. வது ஆண்டு விழா மற்றும் தேவி கருமாரியம்மன் கோவில், 31வது ஆண்டுவிழா நேற்று பூச்சாட்டுடன் துவங்கியது. இரவு அக்னி கம்பம் நடப்பட்டது. ஏப்ரல், 5ம் தேதி பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், 6ல் அம்மன் திருவீதி உலா மற்றும் மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. சக்தி விநாயகருக்கு, 8ல் சிறப்பு பூஜைகளும், 13ல் நடூர் மாரியம்மன் கோவிலில் இருந்து திரிசூலம் எடுத்து, தாரை தப்பட்டை முழங்க சிவபெருமான் படி விளையாடி வருதல் நிகழ்ச்சியும், இரவு சிவபெருமான் அழைக்கும் நடைபெற உள்ளது. 14ஆம் தேதி வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 15ஆம் தேதி வெள்ளிங்கிரி மலைக்கு புறப்படுதலும், 16 பூண்டி மலை அடிவாரத்தில் அபிஷேக பூஜையும், 17ஆம் தேதி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் மறுபூஜைகள் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !