உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்து காளியம்மன் உண்டியலில் ரூ. 3.32 லட்சம் காணிக்கை

கொண்டத்து காளியம்மன் உண்டியலில் ரூ. 3.32 லட்சம் காணிக்கை

அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் தற்காலிக உண்டியலில் 3.32 லட்ச ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா, கடந்த 16 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26 ம் தேதியுடன் நிறைவு பெற்றது. குண்டம் திருவிழாவையொட்டி, அறநிலையத்துறை சார்பில், கோவிலில் 5 இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டது. குண்டம் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி, தற்காலிக உண்டியல் பணம் எண்ணும் பணி நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அறநிலை துறை ஊத்துக்குளி ஆய்வாளர் ஆதிரை, தலைமையில், கொண்டத்துக்காளியம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜா, முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்க நிர்வாகிகள் 13 பேர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 3 லட்சத்து, 32 ஆயிரத்து, 494 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !