காளஹஸ்தி, பகதூர் பேட்டையில் கங்கை அம்மன் திருவிழா
ADDED :1389 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி அடுத்துள்ள பகதூர் பேட்டை பகுதியில் இன்று கருப்பு கங்கையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலையிலேயே (உற்சவமூர்த்தி) கங்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து தீம் தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்க பட்டது. இன்று ( புதன்கிழமை) அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலைமோதின.மேலும் பக்தர்கள் கருப்பு கங்கையம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடு, சேவல் போன்றவற்றை பலி கொடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்திக்கொண்டனர். மேலும் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி ,சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.