திரவுபதை அம்மன் கோயிலில் வீமன் வேடமிட்டு அரக்கர்களை விரட்டும் நிகழ்ச்சி
ADDED :1327 days ago
திருவாடானை: திரவுபதை அம்மன் கோயிலில் வீமன் வேடமிட்டு அரக்கர்களை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது.திருவாடானை வடகிழக்கு தெருவில் அமைந்துள்ள திரவுபதை அம்மன் கோயில் திருவிழா கடந்த 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 28 ல் அர்ச்சுணன், திரவுபதி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று வீமன் வேடமிட்டு அரக்கர்களை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற வீமன் வேடமிட்டு சென்ற பக்தரை பொதுமக்கள் உபசரித்தனர்.