உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பை காசிநாத சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கால்நாட்டு

அம்பை காசிநாத சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கால்நாட்டு

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் பங்குனி திருவிழா கால்நாட்டு வைபவம் அம்மையப்பர் கோயிலில் நடந்தது. ஏப். 5ல் கொடியேற்றமும், 13ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. கால்நாட்டு வைபவம் மகாராஜா முன்னிலையில் நடக்குமென்ற ஐதீகபடி, காராஜாவாக இருந்த 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமான் முன்னிலையில் கோயில் முன் நாட்டப்பட்டது. தொடர்ந்து, ஸ்தம்பத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை நடந்தது. இதில், கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி, நகர வியாபாரிகள் சங்க தலைவர் பண்ணை சந்திரசேகரன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றம் ஏப். 5ம் தேதி அதிகாலையில் கொடி வீதி உலாவை தொடர்ந்து
கொடியேற்றமும், 13ல் தேரோட்டமும், 14ல் தீர்த்தவாரியும், 15ல் கலசமேடு நிகழ்வும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !