உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வண்ணாங்குண்டு கிருஷ்ணர் கோயிலில் மண்டல பூஜை

வண்ணாங்குண்டு கிருஷ்ணர் கோயிலில் மண்டல பூஜை

பெரியபட்டினம் : பெரியபட்டிணம் அருகே வண்ணாங்குண்டு கிராமத்தில் புதியதாக திருப்பணி செய்து கட்டப்பட்ட பாமா, ருக்மணி சமேத சந்தான கோபால கிருஷ்ணர் கோயிலில் கடந்த பிப். 11 அன்று  கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு மண்டல பூஜை விழாவில் சுதர்சன ஹோமம், சகஸ்ரநாம அர்ச்சனை உள்ளிட்டவைகள் நடந்தது. மூலவர் சந்தான கோபால கிருஷ்ணர்,  கருடாழ்வார், சூரியன், சந்திரன், லஷ்மி நரசிம்மர், ஹயக்கிரீவர், தன்வந்திரி, விஷ்ணு, துர்க்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.  நேற்று மாலை 5 மணி அளவில் திருக்கல்யாணம் நடந்த பின்னர், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்ஸவ மூர்த்திகளின் வெளிப்பிரகார வீதியுலா நடந்தது. பூஜைகளை உத்தரகோசமங்கை முத்துக்குமார  குருக்கள், ரெகுபதி அய்யங்கார் செய்தனர். கோயில் தலைவர் ரத்தினம், செயலாளர் நாகராஜன், ஸ்தபதி முருகேசன், ஊராட்சி தலைவர் தியாகராஜன், முத்துகிருஷ்ணன் உட்பட விழாக்குழுவினர்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !