உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

அன்னூர், ஓதிமலை ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியம்மன் கோவிலில், நேற்று மதியம் அம்மனுக்கு, பால், தயிர், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னூர், தென்னம் பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று மதியம் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில், உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சிறப்பு பூஜையும், மருத்துவ அறக்கட்டளை சார்பில் அன்னதானமும் நடந்தது. பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், கதவுகரை, எல்லப்பாளையம், கணேசபுரம் உள்ளிட்ட ஊர்களில் அம்மன் கோவில்களில், பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு மூலிகை சூரணம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !