காளஹஸ்தி கோயில் சார்பில் கண்ணப்பருக்கு பட்டு வஸ்திரம்
ADDED :1306 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் பிக்ஷால கோபுரம் அருகில் தேர் வீதியில் உள்ள பக்த கண்ணப்பருக்கு சிவன் கோயில் சார்பில் பட்டு வஸ்திரங்களை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி ,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் சீர்வரிசை பொருட்களை தலைமீது சுமந்து கொண்டு ஊர்வலமாக கண்ணப்பர் கோயில் வரை சென்று அங்கு கோயில் அர்ச்சகர்களிடம் வழங்கினர். ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக (உகாதி )தெலுங்கு புத்தாண்டு அன்று கண்ணப்பர் கோயிலுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்குவது வழக்கம் என்பது குறிப்பிடதக்கது .இந்நிலையில் இன்று சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தலைமையில் சீர்வரிசைப் பொருட்களை முறைப்படி வழங்கினர்.