பழநி பெரிய நாயகி அம்மன் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
ADDED :1365 days ago
பழநி: பழநி பெரிய நாயகி அம்மன் கோயிலில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பழநி பெரிய நாயகி அம்மன் கோயிலில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு வள்ளி, தேவசேனா சமேத முத்துகுமாரசுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் பஞ்சாங்கம் செல்வசுப்ரமண்ய குருக்கள் வாசித்தார். அதில் சுபகிருது ஆண்டு பலன்கள், கிரக பெயர்ச்சி, திதி, வார, ராசி நட்சத்திரம், யோக, கரண பலன்கள் கூறினார். இதில் கண்காணிப்பாளர் முருகேசன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.