உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்துார் மாரியம்மன் கோயில் கொடியேற்றம்

சேத்துார் மாரியம்மன் கோயில் கொடியேற்றம்

தளவாய்புரம்: ராஜபாளையம் அடுத்த சேத்துார் மேட்டுப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் பங்குனி மாத பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் முடிந்து கொடிமரத்திற்கு நறுமண பொருட்களால் அபிஷேகம் மலர் அலங்காரம் நடைபெற்றது. கோயில் நிர்வாகிகள், விழா குழுவினர், பக்தர்கள் கரகோஷம் எழுப்ப கொடியேற்றம் மகா தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துபவர்கள் கோயிலில் வைத்து காப்புகட்டி கொண்டனர். அம்மன் தண்டியல் அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து கோயிலை வலம் வந்தனர். விழா நாட்களில் சிம்ம வாகனம், பூப்பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் அம்மன் காட்சியளிப்பார். விழா காலங்களில் தினமும் மாலை பட்டிமன்றம், வில்லிசை, கும்மியடி, இசை எழுச்சி நடைபெறும். சிறப்பு நிகழ்ச்சியாக ஏப்.10 ல் பூக்குழி திருவிழா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !