சீலைக்காரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா
ADDED :1302 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தில் உள்ள சீலைக்காரி அம்மன் கோயில் பங்குனி விழா நடந்தது. இதனையொட்டி பக்தர்கள் ஒரு மாதம் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக அக்னிச்சட்டி, பால்குடம், விளக்குபூஜை திருவிழா நடந்தது. கிராமத்தில் உள்ள ஊரணி கரையில் இருந்து உலகம்மாள் கோயில், முளைக்கொட்டு திண்ணை வழியாக பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து கோயிலுக்கு வந்தனர். பின்பு மூலவரான சீலக்காரி அம்மனுக்கு பால் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது. அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள பக்தர்கள், கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.