உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலாலய பூஜை விழா

பாலாலய பூஜை விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட, மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயிலின் உப கோவிலான படித்துறை சித்தி விநாயகர் கோயிலில், குடமுழுக்கு விழா செய்யும் வகையில், நேற்று பாலாலய பூஜை நடந்தது. திருப்பணி வேலைகள் துவங்க ஏதுவாக, காலை 7 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில், விநாயகர் மற்றும் விமானத்திற்கு பாலாலய வைபவம் செய்யப்பட உள்ளது. யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !