உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில்,  கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்  நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தினத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாரி தரிசனம் செய்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வெளியூரிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களின் வாகனங்கள் அதிகரிப்பால், வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !