நெல்லிகுளங்கரை பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
பாலக்காடு: நெல்லி குளங்கரை பகவதி அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றன. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாராவில் உள்ளன புகழ்பெற்ற நெல்லிகுளங்கரை பகவதி அம்மன் கோவில். நடப்பாண்டு திருவிழா நேற்று காலை பள்ளிவாள் கடயலுடன் ஆச்சார சடங்குகள் தவங்கின.
தொடர்ந்து கணபதி ஹோமவும் வரியோலை வாசிப்பும் நடைபெற்றது. பிறகு பறையெடுப்பு எழுந்தருளல் நடந்தனர். தொடர்ந்து 11 மணியளவில் நடந்த வெடி வழிபாடிற்கு பஞ்ச வாத்தியம் முழங்க மூலவர் தெரு வீதிகளில் எழுந்தருளும் வைபவம் நடந்தன. மாலை 4.30 மணி அளவில் நெம்மாரா-வல்லங்கி பிரிவினரின் போட்டி போட்டுக் கொண்டுள்ள தலா 11 யானைகளின் அணிவகுப்பு யானைபந்தல் முன் நடந்தது. இதனிடையே பாண்டி மேளம் முழங்க நடந்த வண்ண முத்துமணி குடை மாற்றம் நிகழ்ச்சி ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து நடந்த பிரம்மாண்ட வானவேடிக்கை பல்லாயிரக்கணக்கானோரின் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளித்தனர். தொடர்ந்து இன்று அதிகாலை பஞ்ச வாத்தியம் முழங்க மூலவர் யானை மீது எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தோம் 3 மணியளவில் மீண்டும் பிரமாண்ட வானவேடிக்கை நடந்தது. இவ்வான வேடிக்கை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். விழாவையொட்டி போலீஸ் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தியிருந்தனர்.