உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரியில் பங்குனித் திருவிழா தொடக்கம்

சிங்கம்புணரியில் பங்குனித் திருவிழா தொடக்கம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் உப்புச்செட்டியார் தெரு காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

ஏப்.5 ம் தேதி இரவு பெண்கள் பூத்தட்டு ஏந்தி வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். ஏப். 12 ல் பால்குடம், கரகம், அக்னிச்சட்டி எடுத்தல் நடக்கிறது. ஏப். 13ல் பொங்கல் வழிபாடு நடக்கிறது. இதேபோல் கக்கன்ஜி நகரில் உள்ள காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அப்பகுதி பெண்கள் பூத்தட்டு ஏந்தி வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். ஏப். 12ல் இக்கோவில் திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !