உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சக்தி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலம் அருகே கீழப்பட்டி சக்தி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ஏப்.,5ல் கணபதி ஹோமத்துடன் துவங்கிய முதல்கால யாக பூஜையில் அமைச்சர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் சுதாகரன், ஒன்றிய கவுன்சிலர் அரவிந்தன், ஊராட்சி தலைவர் பூங்கொடி, துணை தலைவர் பத்திரகாளி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.நேற்று காலை கோயில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி சிவாச்சார்யார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !