உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ விழா திருக்கல்யாணம் நடந்தது.நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் கோயில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார். பெண்கள் திருமண சீர்வரிசை சுமந்து ரதவீதிகளில் ஊர்வலமாக வந்தனர். மணமக்களாக ரகுராம் பட்டர், வரதராஜ் பண்டிட் திருக்கல்யாணத்தை நடந்தினர். கோயில் சன்னதி தெரு நண்பர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !