உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் வசந்தோற்சவ விழா

வீரட்டானேஸ்வரர் கோவிலில் வசந்தோற்சவ விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பத்து நாள் வசந்தோற்சவ விழா துவங்கியது.

அட்டவீரட்டானங்களில் இரண்டாவது தலமான திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று வசந்தோற்சவ விழா துவங்கியது. காலை 7:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகரர் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அம்பாள் சன்னதியில் சகல வாத்தியங்களுடன் பஞ்ச பிரதட்சணமாகி வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கந்தர்வர் பூச்சொரிதல், மகாதீபாராதனை நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினசரி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !