உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண வைபவம் தீவுத்திடலில் அதிகாரிகள் ஆலோசனை

ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண வைபவம் தீவுத்திடலில் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், சென்னை தீவுத்திடலில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண வைபவம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்வது குறித்து, தேவஸ்தான அதிகாரிகள் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.


சென்னை தீவுத்திடலில் கடந்த, 2008ம் ஆண்டு ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது. அதன் பின், வரும் 16ம் தேதி மீண்டும் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, தேவையான வசதிகள் செய்வது குறித்து தீவுத்திடலில் தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.சென்னையில் நடக்கும் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண வைபத்தில் பங்கேற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு துறைகள் செய்ய அனுமதி அளிக்கும் படி, முதல்வர் ஸ்டாலினுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு தலைவர் சுப்பா ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தை, டி.டி.டி., தேவஸ்தானம் சார்பில், தமிழக ஆலோசனைக் குழு தலைவர் சேகர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து வழங்கினார்.இது குறித்து தமிழக ஆலோசனை குழு தலைவர் சேகர் கூறியதாவது:திருக்கல்யாண வைபத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்காக ஒன்பது நுழைவாயில் அமைக்கப்படுகிறது. திருமலை லட்டு பிரசாதம், பழங்கள் வழங்கப்படும். தீயணைப்பு வாகனங் கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுகின்றன. குடிநீர், போதிய கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !