உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

திண்டிவனம் : திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி, நேற்று அதிகாலை 3:50 மணியளவில் கொடியேற்றப்பட்டது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் உற்சவம் வரும் 15ம் தேதி காலை 9:30 மணியளவில் நடக்கிறது. கொடியேற்ற விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஸ்ரீகன்னியா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !