உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா துவங்கியது

பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா துவங்கியது

பழநி: பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பழநி மலைகோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு ரதவீதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ஏப்‌.,8 முதல் ஏப்.,17 வரை பத்து நாட்கள் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று (ஏப்‌.,8) காலை 9:59 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் உற்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாளை (ஏப்.,9) காலை சப்பரத்தில் சுவாமி புறப்பாடு, இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற உள்ளது. தினமும் சேஷ வாகனம், மரசப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை வாகனம், ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏப்.,14 மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். ஏப்.,16ல் திரு ஆவினன்குடி கோயிலுக்கு பால் குடம் எடுத்தல், தோள்கன்னியில் திருத்தேரேற்றம், திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற உள்ளது. பத்து நாட்கள் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. தினமும் பக்தி இன்னிசை பக்தி சொற்பொழிவு நடைபெறும். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் நடராஜன் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !