உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

உத்தரகோசமங்கையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணி அளவில் கொடிமரத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறம் உள்ள கொடிமரம், நந்தி பகவான், பீடம் ஆகியவற்றிற்கு சந்தனம், பால், பன்னீர், இளநீர், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகமும், தீப, தூப அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் உற்ஸவர் மங்களேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்கள் காலையில் பல்லக்கிலும், இரவில் சிம்மம், அன்னம், கிளி, காமதேனு, ரிஷபம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உள் மற்றும் வெளிப் பிரகார வீதியுலா புறப்பாடு நடக்க உள்ளது. ஏப்.15 (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி அளவில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. ஏப்.16 அன்று (சனிக்கிழமை) காலையில் மங்கை பெருமாள் குதிரை வாகனத்திலும், மாலையில் பெரிய தேரோட்டமும் நடக்கிறது. சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் சரண்யா, பேஷ்கார் கண்ணன்,விரகனூர் லட்சுமி ராஜன், கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்கள், குருக்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !