கோயில்களில் ராமநவமி உற்சவம்: பக்தர்கள் வழிபாடு
ADDED :1614 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவேங்கடமுடையான் சன்னதியில் ராமநவமி உற்சவம் சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு கோயிலில் எழுந்தருளிய ராமர்,லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சன பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல் திருமுக்குளம் வடக்குக் கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் சிறப்பாக நடந்தது. வத்திராயிருப்பு ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்ஸவருக்கு பல்வேறு வகை அபிஷேகங்கள், அலங்காரங்கள் பூஜைகள் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.