உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமந்த வாகனத்தில் தேவநாதசாமி வீதியுலா

அனுமந்த வாகனத்தில் தேவநாதசாமி வீதியுலா

கடலுார் : கடலுார் தேவநாதசாமி கோவில் சித்திரை பிரம்மோற்சவ மூன்றாம் நாள் உற்சவத்தில், அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. கடலுார் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 8 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. மூன்றாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை யாளி வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு அனுமந்த வாகனத்தில், ராமர் திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருள வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !