உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாயார் சிக்கம்மன் கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது

மாயார் சிக்கம்மன் கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது

கூடலூர்: மசினகுடி அருகே உள்ள, மாயார் ஸ்ரீ சிக்கம்மன் கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது. முதுமலை மசினகுடி அருகே, மாயார் பகுதி அமைந்துள்ள ஸ்ரீ சிக்கம்மன் கோயில் திருவிழா 8ம் தேதி துவங்கியது. மாலை 4:30 மணிக்கு ஆற்றிலிருந்து, அம்மன் கோவிலுக்கு அழைத்து நிகழ்ச்சி நடந்தது 9ம் தேதி சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடத்தது. 10ம் தேதி சிறப்பு பூஜைகளும், மசிணியம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன இரவு 10:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம், ஈ.பி., குடியிருப்பு, புதனத்தம், மாயார் வழியாக வழியாக நேற்று,, காலை 9:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, மாவிளக்கு பூஜையும்; பக்தர்கள் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !