வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் புஷ்ப அலங்காரம்
ADDED :1376 days ago
சென்னை: தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நேற்று (14ம் தேதி) வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் மூலவர்க்கு விசேஷ புஷ்ப அலங்காரம், உத்ஸவ மூர்த்திக்கு
விசேஷ ஸ்நபன நவகலச திருமஞ்சனமும் நடைபெற்றது. சுபக்ருது வருஷ பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு பெருமாள் உத்ஸவர் உள்புறப்பாடு, ஊஞ்சல் ஓய்யாளி சேவை நடைப்பெற்று பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் வழங்கபட்டது.