உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் விசாலாட்சி சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம்

பரமக்குடியில் விசாலாட்சி சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம்

பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் திருக்கல்யாண விழா நடந்தது.இக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சுவாமி, அம்பாள் வீதி வலம் வந்தனர். நேற்று காலை 10:00 மணிக்கு சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு பூப்பல்லக்கு மற்றும் யானை வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி வலம் வந்தனர். இன்று காலை 9:30 மணிக்கு சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் நடக்க உள்ளது.*இதனைத்தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் கோயிலில் காலை சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது. தொடர்ந்து இரவு 2:00 மணிக்கு மேல் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் பூப்பல்லக்கில் இறங்க உள்ளார். நாளை காலை அழகர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி ஆயிரக்கணக்கான பக்தர்கள் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீச்ச உள்ளனர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !