உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி செல்வ விநாயகர் கோவிலில் லட்ச தீபவிழா

செஞ்சி செல்வ விநாயகர் கோவிலில் லட்ச தீபவிழா

செஞ்சி: செஞ்சி காந்தி பஜார் செல்வ வினாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லட்சதீப விழா நடந்தது. செஞ்சி காந்தி பஜார் செல்வ வினாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 75 வது ஆண்டு லட்சதீப விழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை செல்வ வினாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளி காப்பு அலங்காரமும் செய்தனர். காலை 8 மணிக்கு சிறப்பு யாகமும், மாலை 6 மணிக்கு லட்ச தீபம் ஏற்றினர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன், மேளக்கச்சேரி, கரகாட்டம், வாணவேடிக்கையுடன் சாமி வீதி உலாநடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !