மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1238 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1238 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1238 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜையை முன்னிட்டு நேற்று யோகபைரவர் சன்னதில் பெண்கள் மாவிளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சித்திரை முதல் வெள்ளியில் ஜெயந்தன் பூஜை நடைபெறும்.இந்திரனின் மகன் ஜெயந்தன் மகாராஜா முனிவரின் சாபத்திலிருந்து விமோசனம் பெற கொன்றை வனத்தில் யோகபைரவரை தவமிருந்து வழிபட்டதாக ஐ தீகம். அதை நினைவு கூறும் விதமாக பைரவர் சன்னதியில் ஜெயந்தன் பூஜை நடைபெறுகிறது. நேற்று காலை 9:00 மணிக்கு அஷ்ட பைரவர் யாகம் துவங்கியது. தொடர்ந்து காலை 11:00 மணி அளவில் பூர்ணாகுதி நடந்து தீபாராதனை நடந்தது. பின்னர் கலச புறப்பாடு ஆகி பைரவருக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில் யோகபைரவர் அருள்பாலித்தார். காலை முதல் பெண்கள் பைரவர் சன்னதியில் மாவிளக்கேற்றி நேர்த்தக்கடன் நிறைவேற்றினர். இரவில் ஆதீனகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் வெள்ளிக் குதிரை வாகனத்தில் பைரவர் எழுந்தருளி தீருவீதி புறப்பாடு நடந்தது.
1238 days ago
1238 days ago
1238 days ago