ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி தரிசனம்
ADDED :1532 days ago
திருப்பதி : ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா அவர்கள் குடும்பத்தாரோடு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக இன்று கோயிலுக்கு வந்த வரை கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர் . தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களைப் கோயில் சார்பில் வழங்கப்பட்டது.