திருவேடகம் ஏடகநாதர் கோவிலில் தீர்த்த உற்ஸவம்: பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
ADDED :1308 days ago
சோழவந்தான்: திருவேடகம் ஏடகநாதர் கோயில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை தீர்த்த உற்சவம் நடந்தது. பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி வைகை ஆற்று படித்துறைக்கு சென்றனர். அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். விநாயகர், சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரருடன் சுவாமி நான்கு ரதவீதிகளில் எழுந்தருளினர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் மற்றும் நிர்வாகத்தினர் செய்தனர்.