உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாசக்தி மாரியம்மன் கோவிலில் இன்று அக்னி கம்பம் நடுதல்

மகாசக்தி மாரியம்மன் கோவிலில் இன்று அக்னி கம்பம் நடுதல்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில், இன்று அக்னி கம்பம் நடும் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில், மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், 12 ஆண்டு விழா கடந்த, 12ம் தேதி மாலை பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இன்று இரவு, 10:00 மணிக்கு அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 22ம் தேதி திருவிளக்கு பூஜையும், 24ல் வெள்ளிக்குப்பம்பாளையம் வேணுகானம் பஜனை குழுவினரின், வள்ளிகும்மி கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 26ல் அம்மன் அழைப்பும், 27ம் தேதி காலை சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பால்குடம் எடுத்து வருதலும், மதியம் அம்மனுக்கு அலங்கார பூஜை நடைபெற உள்ளது. மாலையில் மாவிளக்கு எடுத்தலும், 28ம் தேதி மஞ்சள் நீராடும், 29ம் தேதி மறுபூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !