ராமலிங்க சுவாமி சமாதி மடத்தில் குருபூஜை விழா
ADDED :1601 days ago
அலங்காநல்லுார், ஏ:அலங்காநல்லுார் அருகே அதலையில் ராமலிங்க சுவாமி சமாதி மடம் உள்ளது. இங்கு சுவாமி குருபூஜை விழா சித்தர்கள் வழிபாட்டுடன் துவங்கியது. அய்யனார் கோயிலில் இருந்து பக்தர்கள் அலகுகுத்தி, பால்குடம், மாவிளக்கு எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். பெண்கள் கோயில் மரத்தில் வேண்டுதல் பொம்மைகள் வைத்தும், தொட்டில் கட்டியும் வழிபட்டனர். சித்தர்கள், அடியார்கள் உணவு சாப்பிட்ட இலையை நேர்த்திக் கடனுக்காக பக்தர்கள் பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் இலையை எடுத்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.