தென்காசி எக்லாதேவியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :4848 days ago
தென்காசி: தென்காசி எக்லாதேவியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தென்காசி அணைக்கரை தெரு எக்லாதேவியம்மன் கோயிலில் கடந்த 17ம் தேதி கால்கோள் விழாவுடன் கொடை விழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. கொடை விழா அன்று காலையில் கணபதி ஹோமம், கும்ப பூஜை, மகாபிஷேகம், மதியம் உச்சிக்கால பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அம்பாளுக்கு முழுக்காப்பு அலங்காரம், பூஜை, சித்ரா நதிகரையிலிருந்து ஆசாரக்கும்பம் எடுத்து வருதல் நடந்தது. நள்ளிரவில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு படப்பு படையலிட்டு கொடை விழா பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.