இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் திருநாவுக்கரசர் குருபூஜை விழா
ADDED :1299 days ago
மதுரை : மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி, கல்வி அறக்கட்டளை சார்பில், இம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் வரும் 24ம் தேதி, 26ம்தேதி திருநாவுக்கரசர் குருபூஜை மற்றம் திருமுறை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவில், சாதனையாளர் பாராட்டுவிழா, திருமுறை இசை, சொற்பொழிவு, அப்பர் சுவாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக சுவாமி சிவயோகானந்தா கலந்து கொள்கிறார். சுரேஷ் சிவன் வரவேற்புரை நி்கழ்த்துகிறார். விழாவானது இருநாட்களும் மாலை 6.00 மணிக்கு துவங்குகிறது.