உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாளுக்கு அழகர் பட்டு சாற்றல்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாளுக்கு அழகர் பட்டு சாற்றல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு, மதுரை கள்ளழகர் கோயில் பட்டு சாற்றும் வைபவம் நடந்தது.

ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து ஆற்றில் இறங்குவது வழக்கம். இதற்கு எதிர் சீராக மதுரை கள்ளழகர் கோயில் இருந்த பட்டு மற்றும் மங்கலபொருட்கள் கொடுத்து அனுப்புவது வழக்கம். வழக்கம்போல் இந்த வருடமும் ஆண்டாளுக்கு பட்டு மற்றும் மங்கல பொருட்கள் கொண்டு வரப்பட்டு நேற்று பட்டு சாற்றும் வைபவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று இரவு 7 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்கமன்னாருக்கு பட்டு சாற்றபட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !