தண்டு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :1386 days ago
கோவை : கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி நேர்த்திகடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.