உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உபயதாரருடன் ஒப்பந்தம் அவசியம்

உபயதாரருடன் ஒப்பந்தம் அவசியம்

சென்னை-கோவில்கள் தொடர்புடைய பணிகளுக்கு, சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகம், உபயதாரருடன் ஒப்பந்த உடன்படிக்கை செய்ய வேண்டும் என, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களின் திருப்பணி, துறை நிதி, கோவில் நிதி, உபயதாரர் நிதி வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. உபயதாரர் வாயிலாக மேற்கொள்ளப்படும் திருப்பணியின்போது, கோவில் நிர்வாகம், உபயதாரருடன் ஒப்பந்தம் செய்வதில்லை என தெரிகிறது. இனி ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்துவது அவசியம்.

உபயதாரர் வாயிலாக திருப்பணி மேற்கொள்வதை காரணமாகக் கொண்டு, வெளி நபர்களிடம் நன்கொடை வசூலிக்கக்கூடாது. ஆகம விதிகளுக்கு உட்பட்டு, கோவில் புனரமைப்பு வழிகாட்டு நடைமுறைகளின்படி, கட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும். உபயதாரர் வாயிலாக மேற்கொள்ளும் திருப்பணியை மண்டல இணை, உதவி கமிஷனர், செயற்பொறியாளர் மற்றும் ஸ்தபதி ஆகியோர் மேற்பார்வையில் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு குமரகுருபரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !