உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில், நடராஜருக்கு நடந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு, ஓராண்டில் ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். இதில், சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆவணி மாதம், புரட்டாசி மாதம் மற்றும் மாசி மாத பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகமும் மற்றும் ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் ஆகிய நாட்களில்,  ராஜசபை என்னும், ஆயிரங்கால் மண்டபத்தில், சூரிய உதயத்திற்கு முன், அதிகாலை, 4:00  மணிக்கு அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில், சிறப்பு அபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !