அமரபுயங்கரீஸ்வரர் கோவிலில் நடராஜர் சன்னதி கும்பாபிஷேகம்
ADDED :1295 days ago
உடுமலை: சோமவாரப்பட்டி அமரபுயங்கரீஸ்வரர் கோவிலில், நடராஜர் நடன சபை கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த அமரபுயங்கரீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில், புதிதாக நடராஜர் நடனசபை கட்டப்பட்டு, கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.காலை, 6:00 மணிக்கு, மங்கள இசையுடன் விழா துவங்கி, விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ேஹாமம், சிவகாம சுந்தரி நடராஜர் ேஹாமம் நடந்தது.காலை, 8:00 மணிக்கு மேல், விமான கும்பாபிஷேகமும், சிவகாம சுந்தரி நடராஜர் நடன சபை மூலவர் கும்பாபிஷேகமும் நடந்தது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த நடராஜரை பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.