உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகர் கோவிலில் 3 ஐம்பொன் வேல்கள் திருட்டு

முருகர் கோவிலில் 3 ஐம்பொன் வேல்கள் திருட்டு

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே முருகர் கோவிலில், மூன்று ஐம்பொன் வேல்கள் திருடு போய் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அம்பேத்கர் நகரில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்கு, கிருத்திகை, செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். கோவில் கருவறை அருகே வைத்துள்ள உற்சவ சிலைகள் அருகே, மூன்று ஐம்பொன் வேல்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று கோவிலை அர்ச்சகர் திறந்து வைத்துவிட்டு, கோவிலின் வெளியே இருந்தார். சிறிது நேரம் கழித்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த மூன்று ஐம்பொன் வேல்களும் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து கோவில் நிர்வாகி கலைவாணன் புகார்படி, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !