திரௌபதி அம்மன் கோவில் வருடாபிஷேக விழா
ADDED :1415 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோவில், நான்காம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக விழாவை முன்னிட்டு, மூலவர் திரௌபதி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.