உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவத்திமலை வெங்கடாஜலபதி கோவில் திருக்கல்யாண உற்சவம்

திருவத்திமலை வெங்கடாஜலபதி கோவில் திருக்கல்யாண உற்சவம்

செஞ்சி: திருவத்திமலை வெங்கடாஜலபதி கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செஞ்சி அடுத்த பென்னகர் திருவத்திமலை பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கடாஜலபதி கோவிலில் 7 ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று (24ம் தேதி) நடந்தது. இதை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், மகா சங்கல்பம், சிறப்பு யாகம் மற்றும் கலசாபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு மகா தீபாராதனையும், சாமி வீதி உலாவும், மாலை 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் முன்னாள் எம்.பி., ஏழுமலை, மேல்மலையனூர் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பெருமாள் சேவகர் சுவாமிகள், மேல்தாங்கல், அன்னமங்கலம், சாத்தனந்தல் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !