கன்னியாபுரம் காளியம்மன் கோயில் விழா
ADDED :1295 days ago
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே கன்னியாபுரம் காளியம்மன், மாரியம்மன் கோயில் உற்ஸவ விழா ஏப்.15 ல் தீர்த்தம் அழைத்தல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து முளைப்பாரி, மாவிளக்கு , தீச்சட்டி, பொங்கல் , கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதலுடன் சிறப்பு அலங்காரம் , மேளதாளம் , வாண வேடிக்கை முழங்க வர்ணக் குடையுடன் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சந்தான வர்தினி ஆற்றில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. சுற்று பகுதி பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.